யாழில் இருந்து திருச்சி, மதுரைக்கு நேரடி விமான சேவை!

Report Print Murali Murali in சிறப்பு
525Shares

யாழ்ப்பாணத்திலிருந்து மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

யாழ். பலாலி ராணுவ விமான நிலையம், அபிவிருத்தி செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக எதிர்வரும் 17ம் திகதி முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.

இந்நிலையில், பலாலியிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதா‌க” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.