லண்டனில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர்களின் தற்போதைய நிலை!

Report Print Murali Murali in சிறப்பு

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ பொலின்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மெட்ரோ பொலின்டன் பொலிஸாரின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் உள்ளிட்ட இலங்கையர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும், கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ பொலின்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி....

லண்டனில் பெண் உட்பட நான்கு இலங்கையர்கள் கைது