அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி வழக்கின் பிரதான சந்தேக நபரான வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் பதில் ஒன்றை வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுப்பதாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்துவதற்கான ஆவணம் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடி வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இலங்கை தூதரகம் ஊடாக வெளிநாட்டு அமைச்சு அண்மையில் முறையாக அனுப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.