விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு! வெளிநாடு ஒன்றில் பலர் கைது

Report Print Murali Murali in சிறப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை அறிவித்த மலேசியாவின் டி.ஏ.பி கட்சியின் இருவர் உட்பட 07 பேர் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Reuters வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் மற்றும் இயக்கத்திற்கான நிதி சேகரிப்பு ஆகிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இதுவரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.