மீண்டும் போர் புரிய வரும் ஆறாம் நிலம்! இது மக்களின் கதை

Report Print Jeslin Jeslin in சிறப்பு

ஐபிசி தமிழ் ஊடக நிறுவனம் வழங்கும் ஆறாம் நிலம் திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிகள் எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

அன்றையதினம் இந்த திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிகளை இலவசமாக அனைவரும் பார்க்க முடியும்.

உள்நாட்டுப் போருக்கு பின்னரான காலப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் தாயை, மையமாக கொண்டு இந்த படம் சுழல்கிறது.

போர் இடம்பெற்ற ஆறு இடங்களை மையப்படுத்தி இந்த கதையின் களங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

எல்லோரும் நம்பிக்கைகள் நிறைந்தவர்கள், ஆனால் அவர்களின் தேடல் இந்த படத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வித்தியாசமான போரை நடத்துகின்றன.