விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு! மேலும் பலரை கைதுசெய்ய மலேசிய பொலிஸார் திட்டம்

Report Print Ajith Ajith in சிறப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்த மேலும் பலரை கைதுசெய்யவுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேர்னாமா செய்திசேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மலேசியாவின் பயங்கரவாத தடைப்பிரிவின் தலைவர் அயோப் கான் மிடின் பிச்சை இது தொடர்பில் கூறுகையில்,

“கடந்த 28 நாட்களாக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இரண்டு அரசியல்வாதிகள் உட்பட்ட 7 பேரை நேற்று கைதுசெய்ததாக குறிப்பிட்டார்.”

இந்நிலையில் ஆதாரங்கள் இருப்பின் மேலும் பலரை கைதுசெய்யவேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட இரண்டு அரசியல் வாதிகளும் விடுதலைப் புலிகளுக்கு நிதிச்சேகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.