தமிழ் பாரம்பரிய உடையணிந்து வந்த இந்திய பிரதமர் மோடி!

Report Print Murali Murali in சிறப்பு

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து இன்று மாலை மாமல்லபுரம் வந்து சேர்ந்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் இரண்டு நாட்கள் விஜயமாக இந்தியா வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை குண்டு துளைக்காத அரங்கத்தில் சந்தித்து பேசினர்.

இதற்காக கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் நோக்கி சென்றார்.

மாமல்லபுரத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாக குர்தா உடை அணிந்திருக்கும் பிரதமர் மோடி இன்று முதன்முறையாக தமிழர் பாரம்பரியத்தில் வேட்டி சட்டையுடன் காட்சி அளித்தார் .

இதன் பின்னர், ஜிங்பிங்கை மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி சுற்றிக் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.