விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! மலேசியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Report Print Ajith Ajith in சிறப்பு
215Shares

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 பேரும் அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மலேசியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் இதனை இன்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதா என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முடிவை எடுக்கும்.

இதற்கிடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இன்று தீபாவளி தினத்தில் சென்று பார்க்க அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.