இரத்மலானை - யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை ஆரம்பமாகியது!

Report Print Murali Murali in சிறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை Fits Air விமான நிறுவனத்தின் விமானம் முதலாவதாக கொழும்பு இரத்தமலானை விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளது.

இந்த விமான சேவைக்கு உட்பட்ட ஊழியர்கள் சிலர் இந்த விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர். இதன் பின்னர் இந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.

சென்னையில் இருந்து மீண்டும் Fits Air விமான சேவையின் முதலாவது விமானம் இலங்கைக்கு வந்தமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காகும்.

இரத்மலானை விமான நிலையத்திற்கு வருவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 11ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவையில் இலங்கையர்களுக்கு பயணிப்பதற்கு வாரத்தில் 3 நாள் சந்தர்ப்பம் உண்டு.