அங்கஜன் எம்.பியின் வீட்டில் மகிந்தவிற்கு தேனீர் விருந்து!

Report Print Suman Suman in சிறப்பு

கிளிநாச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இல்லத்தில் தேனீர் விருந்துபசாரத்திலும் பங்கு கொண்டார்.

இதன்போது கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அங்கஜன் இராமநாதனிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து கரடி போக்கு சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் கிளிநொச்சி மாவட்ட புத்தி ஜீவிகள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்த மகிந்த ராஜபக்ச அவர்களுடன் கலந்துரையாடினார்.

அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச கேட்டறிந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.