மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர்

Report Print Ashik in சிறப்பு

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆயரிடம் கையளித்து ஆசி பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து ஆயர் இல்லத்தில் ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு ஜோசெப் ஆண்டகையை சந்தித்தும் ஆசி பெற்றுள்ளார்.

இதன்போது முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.