இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு - இலங்கைக்கு பாதிப்பா?

Report Print Murali Murali in சிறப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநாட்டுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மொலுக்கா கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவாக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலியிடம் வினவினோம்.

அதற்கு பதில் அளித்த அவர், இதுவரை இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறினார்.