லசந்தவின் மகள் அமெரிக்க நீதிமன்றில் மேன்முறையீடு!

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கையில் கொலையுண்ட சண்டே டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவும் அவருடைய சட்டத்தரணிகள் குழுவும் நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை செய்துள்ளனர்.

தமது தந்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோதும், சந்தேகநபர் வெளிநாட்டு அதிகாரி என்ற ராஜதந்திர வரப்பிரசாதத்தை முன்வைத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனினும் இந்த தள்ளுபடி தீர்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று கோரியே அஹிம்சா மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளார்.