கோத்தபாயவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் நாட்டைவிட்டு தப்பியோட்டம்?

Report Print Murali Murali in சிறப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு அண்மையில் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்த நிலையில், வழக்கு தள்ளுபடி செய்திருந்தது.

அந்த வகையில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் இன்று நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர் வெளிநாட்டிற்கு செல்லும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.