கோத்தபாயவின் பதவியேற்பு நிகழ்வுக்கு சென்ற ரணிலுக்கு ஏற்பட்ட நிலைமை!

Report Print Murali Murali in சிறப்பு

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவிப் பிராமண நிகழ்வுக்கு அனுராதபுரம் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி மக்கள் கூச்சலிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

அனுராதபுரம் ருவன்வெளிசேயே விகாரை வளாகத்தில் கூடியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் இவர்களை பார்த்தவுடன் கூச்சலிட்டனர்.