ஆயுதப்படைகளின் புதிய தளபதியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யத்தடை!

Report Print Mohan Mohan in சிறப்பு

கடற்படையினரின் உத்யோகபூர்வ இணையத்தளம் ஒன்றில் முப்படைத் தளபதியை குறிக்கும் புகைப்படம் பதிவேற்றம் செய்வது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இணையத்தளத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சிகாலத்தில் அவரது புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர் முப்படையினரின் தளபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரான கோத்தபாய ராஜபக்ச தற்போது முப்படையினரின் தளபதியாக உள்ளபோதும் அவரது புகைப்படம் கடற்படையினரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.