சுவிட்ஸர்லாந்தின் பணியாளர் இலங்கையில் கடத்தப்பட்ட விவகாரம்? சுவிஸ் அரசாங்கம் கடும் கண்டனம்

Report Print Ajith Ajith in சிறப்பு

சுவிட்ஸர்லாந்தின் பணியாளர் ஒருவர் இலங்கையில் கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கையின் தூதுவரை அழைத்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விளக்கம் கோரியதாக பேர்னில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்தின் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளுர் பெண் பணியாளர் ஒருவரே கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணிநேரம் குறித்த பெண் பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்

குற்றப்புலனாய்வுத்துறையின், காவல்துறை அதிகாரி நிசாந்த சில்வா அண்மையில் சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த பெண் பணியாளர் விசாரணை செய்யப்பட்டதாக சுவிட்ஸர்லாந்தின் செய்திகள் தெரிவிக்கின்றன