தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேசத்தையும், தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது! திருமுருகன் காந்தி

Report Print Murali Murali in சிறப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் போர் நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இன்று தங்களை தமிழ் தேசியவாதிகள் என்றே கூறிக்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சிங்கள ஆட்சியாளர்களுடனும், பேரினவாதிகளுடனும் கைகோர்த்து நிற்கின்றனர். இந்நிலையில், சர்வதேசத்தையும், தமிழ் மக்களையும் அவர்கள் காட்டிக்கொடுகின்றனர்” எனவும் அவர் கூறியுள்ளார்.