எதிரணி அரசியலில் இருந்து கொண்டு அராஜகத்திற்கெதிராக குரல்!

Report Print Nesan Nesan in சிறப்பு

தமிழ் மக்களுக்கான விடுதலையை சிங்கள பேரினவாத அரசு இதுவரையிலும் தரவில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த உலக நாடுகளும், உலக சமூகமும் தமிழரக்ளுக்கான அங்கிகாரத்தை வழங்கவில்லை. அத்துடன், இந்த மாவீரர் நாளுக்கு மதிப்பளிக்கவும் தவறி வருகின்றது.

தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு தமிழினத்தை அழித்த சிங்கள பேரினவாதிகள் இன்று பெருமை பேசிக்கொண்டிருகின்றனர்.

சிங்கள அரசு எவ்வாறு தமிழ் மக்களை அழித்ததோ, அதே இரத்த கறையுடன் கோட்டாபய ராஜபக்ச இன்று ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கின்றார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.