ஒரு பாட பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், சாதாரண தர மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மைத்திரி!

Report Print Kamel Kamel in சிறப்பு

இம்முறை கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்றைய தினம் பிற்பகல் 3.19 மணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவ மாணவியர் பரீட்சையில் வெற்றியீட்டுவதற்கு தேவையான சக்தியும், தைரியமும் கிடைக்கப் பெற வேண்டுமென இதயபூர்வமாக பிரார்த்தனை செய்வதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற முன்னதாக பிரார்த்தனையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்காது ஒரு பாடம் முடிவடைந்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறித்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் பரீட்சை எழுதி விட்டு வந்து நித்திரைக்கு போயிருப்பார்கள், பரீட்சை பற்றி பத்திரிகையிலா தெரிந்து கொண்டீர்கள் என பல்வேறு விமர்சனங்கள் டுவிட்டர் பதில் பதிவுகளாக வெளியிடப்பட்டுள்ளன.