இலங்கைக்கு விசேட கருவிகளை வழங்கிய அமெரிக்கா!

Report Print Ajith Ajith in சிறப்பு
380Shares

இலங்கையின் தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகத்துக்கு மண்சரிவை அவதானிக்கும் கருவிகளை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது.

களுத்துறையில் மண் சரிவு ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் இந்த கருவிகள் பொருத்தப்படவுள்ளன.

இந்த கருவிகளை இயக்குவது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலைய அதிகாரிகள் அண்மையில் இலங்கைக்கு வந்து இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

இந்தக்கருவிகள் மண்சரிவு இடங்களை அறிந்து மனித மற்றும் சொத்து இழப்புக்களை கட்டுப்படுத்தமுடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை மற்றும் சனத்தொகை அதிகரிப்பு, புதிய நிர்மாணங்கள் காரணமாக மண்சரிவுக்கான அபாயம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.