தமிழர்களுக்கு நீதி கிடைக்க சுவிஸ் அரசு ஐந்து மில்லியன் சுவிஸ் பிராங்குகளை செலவு செய்துள்ளது!

Report Print Dias Dias in சிறப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில் அவர்கள் தீவிவாதத்தாக்குதல்களுக்கு காராணமாக இருந்திருப்பினும் அது அவர்கள முதன்மை நோக்கமாக இருக்கவில்லை என சிவமகிழி எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்புக்கிடையாது. இத்தீப்பினை சுவிட்ஸர்லாந்தின் நடுவன் அரசின் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டே தீர்ப்பாக அளித்திருந்தது.

இதனை மீண்டும் லுவுசானில் அமைந்துள்ள சுவிட்ஸர்லாந்து நாட்டின் மேன்முறையீட்டு உச்சநீதிமன்றம் 08.11.2019 மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வழக்கினை சுவிட்ஸர்லாந்து அரசு தானாத் தொடுக்க முன்னர் ஐரோப்போல் எனப்படும் ஐரோப்பிய கூட்டுக்காவற்துறையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முனைப்பே காரணமாக இருந்ததாகவே முன்னை நாள் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளராக இருந்த குலம் அவர்களின் வழக்கறிஞர் பொசொனே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதன்படி பொசொனே சுவிஸ் அரசிற்கும் நடுவன் அரசின் நீதிமன்றத்திற்கும் அழுத்தமாகச் சொன்ன செய்தி, பல நாடுகளின் அழுத்தத்திற்கு உட்பட்டு சுவிட்ஸர்லாந்தின் பொதுச்சட்டத்தின் நீதிக்கு மாறாக இவ்வழக்கு தொடக்கப்பட்டிருக்கு என்பதாகும்.

வழக்குச்செலவு, வழக்கறிஞர்களின் ஊதியம் என இவ்வழக்கு சுவிட்ஸர்லாந்து நாட்டிற்கு தோறாயகமாக ஐந்து மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவுடன் நடைபெற்றது.

13 பேர் மீது குற்றம் சுத்தப்பட்டிருந்தது, ஒருவர் தவிர்த்து ஏனைய அனைவர் மீதும் 1999ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை சுவிஸ் பொதுச்சட்டம் 260 கீழ் குற்றவியல் அமைப்பிற்கு உதவிய, இயங்கியது குற்றமாக சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு 14. 06. 2018 தீர்ப்பின்படி பொசொனே இயம்பியது உறுதி செய்யப்பட்டது. சுவிட்ஸர்லாந்தின் வரலாற்றில் வேறு எந்த வழக்கும் இத்தகைய நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளவில்லை.

400 பக்கங்களில் எழுதப்பட்டு 8 வாரங்கள் நடைபெற்ற வழக்கின்தீர்ப்பு நடுவன் அரச வழக்கறிஞர்களுக்கு கறுப்பு நாளை உறுதிசெய்தது.

நடுவன் அரசின் உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் 260 பிரிவை விடுதலைப்புலிகள் மீது சுமத்தமுடியாது என்று உறுதியாகத் தீர்ப்பளித்தது.

ஏனெனில் அச்சட்டம் மறைமுகமாக இயங்கும் அமைப்புக்கள் மீது, அவர்கள் நடாத்தும் திட்டமிட்ட பாதாளக்குழு வன்முறைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டமாகும். குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு நிழல் அரசினைக் கொண்டிருந்தது.

அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி இருப்பினும் அவர்களின் நோக்கம் தமது அரசினை அங்கீகரிப்பதற்கான போராட்டமாக இருந்தது. தமது இனத்திற்காக அவர்கள் போராடினார்கள் என சிறப்பு மிகு தீர்ப்பினை சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் 14. 06. 2018 நீதிமன்றம் அளித்திருந்தது.

அக்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததோ அன்றி உதவியதோ குற்றமாகாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

இருந்தபோதும் குற்றம் சுமத்தப்டப்டோரில் ஐவரிற்கு வங்கியை ஏய்ப்புச்செய்த குற்றத்திற்காகவும், இருவர் ஆவணங்கைளப் போலியாகத் தயாரித்த குற்றத்திற்காகவும் ஒத்திவைக்கப்படும் தடுப்பு மற்றும் சிறுதொகை தண்டனைப் பணத்துடன் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இத்தீர்ப்பிற்கு எதிராக அரசதரப்பு வழக்கறிஞர்கள் லவுசானில் அமைந்துள்ள மேன்முறையீட்டு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

அரசதரப்பு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதும் குற்றவியல் அமைப்புடன் இயங்கியது, வங்கியை ஏமாற்றியது, போலி ஆவணங்களைத் தயாரித்தது எனும் குற்றத்தை மீண்டும் சுமத்தி மேன்முறையீடு செய்திருந்தது.

இம் மேன்முறையீட்டிற்கு 08. 11. 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரச தரப்பு 14.06.2018 தீர்ப்பிற்கு எதிராக செய்த மேன்முறையீட்டைப் பெருவாரியாக மறுத்துள்ளது. அரசதரப்பின் மேன்முறையீடு தரைதட்டிய கப்பலாக மூழ்கிவிட்டது.

அரச தரப்பின் கோரிக்கையில் ஒருவர்மீது மட்டும் போலி ஆவணங்களைத் தயார் செய்தமைக்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றத்தை மீளாய்வு செய்ய அனுமதி அளித்துள்துள்ளது.

2018ம் ஆண்டின் தீர்ப்பின்படி வங்கி முறைகேட்டுக் குற்றத்திற்கு சிறிதளவு தண்டனைப்பணத்தினைத் தண்டனையாகப் பெற்வர்களில் ஒருவர்

இத்தீர்பிற்குபு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.

அவரது மேன்முறையீட்டினை லவுசான் மேன்முறையீட்டு உச்சநீதிமன்றம் ஏற்று அவரது கோரிக்கையினை பெலின்சோனா நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதனை 03. 12. 2019 நீதிமன்றம் ஊடக அறிக்கையாத் தமது இணையத்தில் வெளியிட்டுள்ளது:

https://www.bger.ch/files/live/sites/bger/files/pdf/Medienmitteilungen/de/6B_383_2019_Intranet_d.pdf இத்தீர்ப்பில் குறிக்கப்பட்டுள்ள இவ்வசனம் குறிப்பிடத்தக்கதாகும்:

Artikel 260ter StGB wurde ursprünglich zur Bekämpfung der organisierten Kriminalität mafiösen Charakters konzipiert und später auch auf terroristische Organisationen angewendet.

Abgesehen von Gruppierungen, die das Bundesgericht bereits als terroristisch qualifiziert hat (u.a. "Al-Qaida" und "Islamischer Staat"), ist nur schwer absehbar, ob eine Organisation, die terroristische Akte begangen hat, als kriminelle Organisation im Sinne von Artikel 260 ter StGB einzustufen ist.

Was die LTTE betrifft, ist diese entgegen der Ansicht der Vorinstanz zwar auch Urheberin terroristischer Angriffe gewesen.

Zu ihren überwiegenden Zielen gehörte dies allerdings nicht; dazu zählten vielmehr die Führung eines konventionellen bewaffneten Kampfes, die quasi-staatliche Verwaltung eines Gebiets und die Anerkennung der Unabhängigkeit ihrer ethnischen Gemeinschaft.

Angesichts des Umfangs und der Vielfältigkeit der nicht-kriminellen Aktivitäten der LTTE kann schwerlich gesagt werden, dass eine Person, die zu ihren Gunsten Geld gesammelt hat, davon ausging, ihr Verhalten diene direkt einem kriminellen Ziel.

260ter StGB எனும் சட்டம் பாதாள உலகக்குழுக்களின் குற்றவியல் செயல்களைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இயற்றப்பட்டதாகும். இச்சட்டம் பின்னர் தீவிரவாத அமைப்புக்கள் மீதும் பயன்படுத்தப்பட்டது.

அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் ஆகிய அமைப்புக்கள் நடுவன் அரசநீதிமன்றத்தால் தீவிரவாத அமைப்பாக நோக்கப்படுகின்றன.

தீவிரவாதச் செயலில் ஈடுபடும் அனைத்து அமைப்புக்களும் குற்றவியில் செயலிலும் ஈடுபடுகின்றார்களா என இனங்காண்பது கடினமானதாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில் அவர்கள் தீவிவாதத்தாக்குதல்களுக்கு காராணமாக இருந்திருப்பினும் அது அவர்கள முதன்மை நோக்கமாக இருக்கவில்லை.

அதனைவிட தமது ஆயுதப்போராட்டத்தால் தமது ஆளுகைக்கு உட்படட மண்ணில் தமது நிர்வாகத்தை இனச்சமூகவிடுதலையாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதே முதன்மை நோக்காக அமைந்திருந்தது.

இப்பெரும் சுற்றளவின் பார்வையில் மற்றும் பன்முகக் குற்றமற்ற செயல்களின் பின்னணயில் விடுதலைப்புலிகளது செயல்கள் குற்றவியல் செயலாக நோக்கமுடியாது, அதுபோல் அவ் அமைப்பிற்கு நிதிசேகரித்தவர்களும் தாம் குற்றவியில் செயலில் ஈடுபடுவதை நோக்கமாகக்கொண்டிருக்கவில்லை.

கிட்டத்தட்ட இலங்கைப் பணத்திற்கு சுவிஸ் அரசு 92 கோடி செலவுசெய்து, நீதியை நிலைநாட்டி, விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு இல்லை எனும் அறிதித்தீர்ப்பினை அறத்துடன் எழுத்தித்தந்திருக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.