கல் , மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்று முதல் இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பெரும் வர்த்தகர்கள் இந்த அனுமதிப்பத்திரங்களை எடுத்து சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.