பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி!

Report Print Steephen Steephen in சிறப்பு

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ காணி, சொத்துக்கள் மற்றும் படையினரின் குடியிருப்புகள் சபையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அமைய ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள புதிய இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் பிரியங்க பெர்னாண்டோ தனது கடமைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றிய போது, அதற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தை அறுக்க போவதாக சைகை காட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து அவர் இலங்கைக்கு திருப்பிய அழைக்கப்பட்டார்.

வத்தளையில் உள்ள போர் வீரர்கள் வள கேந்திர நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நிலையில், இந்த புதிய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றிய போது, அதற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தை அறுக்க போவதாக சைகை காட்டியதாக குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

Latest Offers

loading...