விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயன்ற நால்வர் கைது! பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

Report Print Murali Murali in சிறப்பு

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும், புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் போராளிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நால்வரும், மூதூர் மற்றும் சம்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டபரிச்சான் தெற்கு, இறால்குழி பகுதிகளிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகினறது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்களில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அவர்களிடம் இருந்து டி 56 ரக துப்பாக்கி, 61 தோட்டாக்கள், மூன்று கையெறி குண்டுகள், மூன்று டெட்டனேட்டர்கள், வெடி மருந்துகள் மற்றும் 9 மி.மீற்றர் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.