இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து! இலங்கையர்கள் மூவர் டுபாயில் கைது

Report Print Murali Murali in சிறப்பு

இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் இலங்கையர்கள் மூவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை டுபாய் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மூன்று இளைஞர்களும் துபாயில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பாதுகாப்பு காவலர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின் பின்னர் கடந்த மே மாதம் இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர்கள் பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்த விடுதி ஊழியர்களால் அந்த நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. அதற்கமைய குறித்த மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து அவர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைப்பேசிகளையும், மடிக்கணனிகளையும் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளுக்காக கையகப்படுத்தினர்.

அதற்கமைய இன்றைய தினம் வழக்கு விசாரணைகளில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மூன்று இளைஞர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.

அத்துடன் மாறாக தமது நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மாத்திரம் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22ம் திகதி வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Latest Offers

loading...