எனது பெயரில் மோசடி செய்பவர்களை பொலிஸ்க்கு அறிவிக்கவும் - ஜனாதிபதி பொது மக்களிடம் கோரிக்கை

Report Print Murali Murali in சிறப்பு

தனது பெயரை கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களில் உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த கோரிக்கையினை விடுத்துளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தனது பெயரையும், ஜனாதிபதி செயலகத்தின் பெயரையும் பயன்படுத்தி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் என கூறிக்கொண்டு, சிலர் மோசடிகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தினதும், தனது அனுமதியின்றியே இடம்பெறுகின்றன.

ஆகையினால், இவ்வாறான நபர்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு” ஜனாதிபதி கோரியுள்ளார்.