சுவிஸ் தப்பிச்சென்ற நிஷாந்த டி சில்வா! நாடு கடத்துமாறு கோரவுள்ள இலங்கை

Report Print Murali Murali in சிறப்பு

சுவிட்ஸர்லாந்துக்குத் தப்பிச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிஷாந்த டி சில்வாவை நாடு கடத்துவது குறித்து கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துடன் வெளிவிவகார அமைச்சு விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் குற்ற விசாரணைப் பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, நிஷாந்த டி சில்வா, குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச் சென்றார்.

சுவிட்ஸர்லாந்துடன், இலங்கை வலுவான உறவுகளைப் பேணினாலும், பல உயர்மட்ட விசாரணைகளுடன் நிஷாந்த சில்வா தொடர்புபட்டுள்ளதால், அவரை நாடு கடத்துமாறு சுவிட்ஸசர்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.