மத்தள விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள்! விசாரணை செய்ய அமைச்சர் உத்தரவு

Report Print Murali Murali in சிறப்பு

கடந்த ஆட்சியில், நெல் களஞ்சியமாக மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்பட்ட காலத்தில், ஏற்பட்ட சேதங்கள் குறித்து, விசாரணை செய்ய அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்நிலையில், மத்தள விமான நிலையம் ஒருபோதும் வெளிநாட்டிற்கு விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “நாட்டில் வரி செலுத்துபவர்களின் பணத்தில் குறித்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. எனினும், அதனைக் கடந்த அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது. மாறாக விமான நிலையத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டது.

இந்நிலையில், விமான நிலையத்தை சரி செய்வதற்கு தற்போது, மக்களின் வரிப்பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில் முதலீடு செய்ய உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில், விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers

loading...