புதிய அரசாங்கத்தில் மேலும் இரு முன்னாள் படை அதிகாரிகளுக்க உயர் பதவி!

Report Print Murali Murali in சிறப்பு

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் மேலும் இரண்டு முன்னாள் படை அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்படி, வெளிநாட்டு உறவுகளுக்கான மேலதிக செயலராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக, முன்னாள் இராணுவ அதிகாரியும்,முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று பதவியேற்றுள்ளார்.

இதேவேளை, அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இலங்கை கடற்படையின் 18வது தளபதியாக பணியாற்றியதுடன், 2014ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி ஓய்வு பெற்றிருந்தார்.

அத்துடன், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், யாழ். படைகளின் கட்டளை தளபதியாகவும், பின்னர் வடக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...