மரதன் ஒட்டத்தில் உலக சாதனைகளை நிலைநாட்டிவரும் மலையகப் பெண்

Report Print Thirumal Thirumal in சிறப்பு
135Shares

மரதன் ஒட்டத்தில் மலையகப் பெண் ஒருவர் உலக சாதனைகளை படைத்து வருகிறார்.

மலையகத்தில் உடபுஸ்ஸல்லாவ, வோல்டிமார் தோட்டத்தைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு சாதனை படைக்கிறார்.

மலையகத்தில் உள்ள பெண் மரதன் போட்டியாளர்களில் (42 கி.மீ 192 செ.மீ) இவர் ஒருவர் மாத்திரமே சிறந்த வீராங்கனையாக திகழ்கின்றமை சிறப்பம்சமாகும்.

இவர் கடந்த 2017ஆம் இடம்பெற்ற மரதன் ஒட்டப்போட்டியில் 15ஆவது இடத்தையும், சீனா கும்மினில் இடம்பெற்ற மரதன் ஒட்டப்போட்டியில் 04ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இவர் 2014ஆம் இடம்பெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடம்பெற்று தங்க பதக்கத்தினை சுவீகரித்திருந்தார்.

அந்தவகையில், இம்முறை 2019ஆம் ஆண்டு சீனா மெக்கவோவில் நடைபெற்ற மரதன் ஒட்டப்போட்டியில் 17ஆம் இடத்தை பெற்று இலங்கைக்கும் மலையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.