மத்திய வங்கிக்கான நிரந்தர ஆளுநரை நியமிப்பதில் தாமதம்!

Report Print Ajith Ajith in சிறப்பு

மத்திய வங்கிக்கான நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படுவதில் இன்னும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நிலையில் இருந்த இந்திரஜித் குமாரசுவாமி விலகியப்பின்னர் சிரேஸ்ட உதவி ஆளுநர் நந்தலால் வீரசிங்க பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் பேராசிரியர் ரஞ்சித பண்டார என்பவரே அடுத்த ஆளுநராக பதவியில் அமர்த்தப்படுவார் என்று ஊகங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், நந்தலால் வீரசிங்கவும் திறமை வாய்ந்த அதிகாரியாக மத்திய வங்கியில் செயற்பட்டு வந்துள்ளார். பொருளாதாரத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ள அவர் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றுள்ளார்.

Latest Offers