நாக விகாரைக்கு சென்றார் யோசித்த ராஜபக்ச!

Report Print Murali Murali in சிறப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்களிடமும் அவர் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அவர், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த அதேவேளை, யாழ். மறைமாவட்ட ஆயரையும் சந்தித்து பேசியிருந்தார்.

அத்துடன், யாழில் சுவரோவியங்கள் வரையும், இளைஞர், யுவதிகளை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, இன்றைய தினம், யோசித்த ராஜபக்ச நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

Latest Offers

loading...