ராஜிதவை தேடி வைத்தியசாலைக்கு விரைந்த CID அதிகாரிகள்?

Report Print Murali Murali in சிறப்பு

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விசாரிக்க CID அதிகாரிகள் சற்றுமுன் அங்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு, கொழும்பு மேலதிக நீதிவான் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய விவகாரம் தொடர்பாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தம்மைக் கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அதுகுறித்த விசாரணையை 30ம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தது.

அதேவேளை, ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கும் உத்தரவு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜித சேனாரத்னவை, நீதிமன்ற பிடியாணை உத்தரவைப் பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் குற்ற விசாரணைத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தை நாடிய குற்ற விசாரணைப் பிரிவினர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து ராஜித சேனாரத்ன எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த பின்னணியில் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இன்றும்> நேற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்ட நிலையில், ராஜித சேனாரத்ன இன்று மாலை திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விசாரிக்க CID அதிகாரிகள் சற்றுமுன் அங்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.