ஹப்புதளையில் இடம்பெற்ற விமான விபத்து! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in சிறப்பு

ஹப்புத்தளையில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் உட்பட்ட ஆறு தரப்புக்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டாரவளை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம், விமானப்படை, வானிலை அவதான மையம், சட்டவைத்திய அதிகாரி, பதுளை வைத்தியசாலை, வான் ஆய்வு மற்றும் போக்குவரவு கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் விமானிகளுக்கு இடையில் இடம்பெற்ற சம்பாஷனைகள் தொடர்பான குரல் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் மத்தளை விமான நிலையத்தின் வான் பரப்பு ஆய்வு கட்டுப்பாட்டுக்கு அறைக்கு உத்தரவிட்டுள்ளது.

IT 12 என்ற சிறிய ரக போக்குவரத்து விமானம் நேற்று விபத்துக்குள்ளான போது அதில் பயணித்த நான்கு பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.