இலங்கையர் ஏழு பேர் உள்ளிட்ட 66 பேர் வெளிநாட்டில் கைது!

Report Print Ajith Ajith in சிறப்பு

எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் 7 இலங்கையர்கள் உட்பட்ட 66 பேரை நைஜீரிய கடற்படையினர் இன்று அந்த நாட்டின் பொருளாதார மற்றும் நிதிக்குற்றவியல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

இவர்களில் 57 நைஜீரியர்கள், மற்றும் இரண்டு கானா நாட்டினரும் உள்ளடங்குகின்றனர். உரிய அனுமதியின்றி எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் 2019, டிசம்பர் 3ம் திகதி முதல் டிசம்பர் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் சுமார் 7 கப்பல்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த நடவடிக்கை காரணமாக நாட்டுக்கு 906,205.000 நைஜீரிய நைய்ரா நட்டமேற்பட்டுள்ளதாக நைஜீரியா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இவர்களின் நடவடிக்கை காரணமாக நாட்டின் பெற்றோலிய உற்பத்திகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நைஜீரிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.