உடன் அமுலுக்கு வரும் வகையில் 43 பொலிஸாருக்கு இடமாற்றம்!

Report Print Ajith Ajith in சிறப்பு

மூன்று உதவி காவல்துறை அதிபர்கள் உட்பட்ட 43 காவல்துறையினருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை அடிப்படையிலேயே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.