ஹப்புத்தலை விமான விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

Report Print Murali Murali in சிறப்பு

ஹப்புத்தலையில் நேற்று விபத்துக்கு உள்ளாகிய விமானம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி விமானம் பறப்பதற்கு உகந்த நிலையிலேயே இருந்ததாக விமானத்தை தயாரித்த நிறுவனம் சான்றிதழ் வழங்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் விபத்து ஏற்படும்போது குறித்த விமானம் சரியான வேகத்தில்தான் பறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், விபத்து தொடர்பாக ஐவர் அடங்கிய குழுவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த விமான விபத்து தொடர்பில் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் உட்பட்ட ஆறு தரப்புக்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.