வணக்கம் ஐரோப்பா 2020 - வற்றாப்பளை கண்ணகி அம்மனின் புகழை போற்றிப் பாடிய இறுவட்டு வெளியீடு

Report Print Murali Murali in சிறப்பு

வணக்கம் ஐரோப்பா 2020 நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்வில் வற்றாபளை கண்ணகி அம்மனை போற்றி இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது முதல் பிரதியை ஈழத்து கவிஞர் கு.வீராவிடம் இருந்து, ஐ.பி.சி. தமிழ் குழுமத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா பெற்றுக்கொண்டார்.

ஜேர்மன் Dortmond நகரில் 01.01.2020 அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் 200 தமிழ் கலைஞர்கள் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயம் வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.

கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.

ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிப்பது வழக்கமாய் இருந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, வற்றாபளை கண்ணகி அம்மனை போற்றி இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.