வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கடந்த வாரம் தமது பாடசாலை ஆசிரியரை மட்டக்களப்பு கல்லாறு பிரதேசத்தில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
பாசிக்குடாவில் மூன்று நாட்கள் சுற்றுலா சென்றிருந்த அவர் 1960ம் ஆண்டில் கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்பித்த வி.சிவலிங்கம் என்ற ஆசிரியரை சந்தித்து ஆசி பெற்றதுடன் அவருடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
தினேஸ் குணவர்த்தனவை பார்த்த ஆசிரியர் கண்ணீர் மல்க அவரை வரவேற்றார். அத்துடன் பாடசாலை நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டார்.
இது தொடர்பில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தமது டுவிட்டரில் பதிவுகளை செய்துள்ளார்.
“நான் உங்கள் ரசிகன் அல்ல. ஆனால் நீங்கள் செய்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கற்பித்தவர்களுக்கு நன்றியை காண்பிப்பது அனைவரும் செய்யவேண்டிய ஒன்று” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நாம் அனைவரும் இலங்கையராக ஒன்று சேர்ந்து வாழ்வோம். ஒவ்வொருவரும் இரண்டு மொழிகளை கற்போம். இந்நிலையில் ரோயல் கல்லூரி உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.