ஹப்புதலையில் இடம்பெற்ற விமான விபத்து! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Report Print Murali Murali in சிறப்பு
418Shares

பதுளை - ஹப்புத்தலையில் அண்மையில் விபத்துக்கு உள்ளாகின விமானப் படைக்கு சொந்தமான வை-12 ரக விமானம் பறப்பதற்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

விமானப் படையிடம் இன்னும் இதுபோன்ற இரண்டு விமானங்கள் இருப்பதாகவும் அவை தற்போதும் பலாலி-திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கான உள்ளூர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் ஹெலி டுவர்ஸ் என்கிற உள்ளூர் விமான சேவை செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விமான சேவையை நடத்த இன்னும் ஏ.ஓ.ஐ என்கிற சான்றிதழ்கூட பெறப்படாத நிலையில்தான் உள்ளூர் விமான சேவை நடத்தப்பட்டு வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹப்புதலையில் இடம்பெற்ற இந்த விமான விபத்தில் நால்வர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.