பற்றி எரியும் அவுஸ்திரேலிய காடு - பிரதமருடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய

Report Print Vethu Vethu in சிறப்பு

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாடல் மேற்கொண்டுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டு தீயினால் ஏற்பட்ட அழிவு தொடர்பில் ஜனாதிபதி தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் உயிரிழந்த குடும்பங்களின் உறவினர்களுக்கு தனது வருத்தத்தை ஜனாதிபதி வெளியிட்டார் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் உட்பட பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்கும். தற்போதைய சூழ்நிலையில் அவுஸ்திரேலியர்களின் வலி நன்கு புரிந்தவர்களாக இலக்கை மக்கள் உள்ளனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய மக்களுக்காக தேயிலை தொகை ஒன்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய கூறியுள்ளார்.