ரஞ்சனுக்கு எதிராக நாளை நடவடிக்கை!

Report Print Ajith Ajith in சிறப்பு

சர்ச்சைக்குரிய குரல்பதிவு இறுவட்டுக்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதற்கான பரிந்துரையை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்வைக்கவுள்ளார்.

சர்ச்சைக்குரிய குரல் பதிவு இறுவட்டுக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பட்ட கருத்துக்களுக்கு மத்தியிலேயே இந்த தகவலும் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்த குரல் பதிவுகளை ஊடங்கள் ஒலிபரப்புவதற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் குரல் பதிவுகள் பொலிஸாரிடம் இருந்தே ஊடகங்களுக்கு கசிந்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது

Latest Offers

loading...