ஈரான் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிய பிரித்தானிய ஏர்வேஸ் விமானம்!

Report Print Murali Murali in சிறப்பு

அமெரிக்க படைகளுக்கு எதிராக ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் போது பிரித்தானிய ஏர்வேஸ் விமானம் நூலிழையில் தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் அமெரிக்காவை பழிவாங்குவோம் எனவும் தெரிவித்திருந்தது.

இதன்படி, அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இந்தியாவின் மும்பை நகரில் இருந்து லண்டன் நோக்கி பிரித்தானிய ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

ஈராக் வான்பரப்பில் நுழைந்த விமானம் திடீரென ஏதென்ஸ் வழியாக லண்டன் நோக்கிச் சென்றது. இதன்போது, அமெரிக்கா படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, பிரித்தானிய ஏர்வேஸ் விமானத்தில் இருந்த 200 பயணிகளும் உயிர் தப்பியததாக” அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Latest Offers

loading...