உக்ரேனிய விமானத்தை ஈரானே சுட்டு வீழ்த்தியது! அமெரிக்கா தெரிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

தெஹ்ரான் அருகே புதன்கிழமை 176 பேருடன் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதனிடையே உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

இந்நிலையில், அந்த விமானம் ஈரான் நாட்டு படைகளே தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இதேவேளை, இந்த விமான விபத்தில் ஈரானியர்கள் 82 பேரும், கனடாவை சேர்ந்த 63 பேரும், உக்ரைனை சேர்ந்த 11 பேரும், சுவீடனை சேர்ந்த 10 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேரும், ஜேர்மனி, பிரித்தானியாவை சேர்ந்த தலா 3 பேரும் உயிரிழந்தனர். இதில் 15 சிறுவர்கள் அடங்குவர்.

எவ்வாறாயினும், தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, விமான விபத்து பற்றி யூகங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers