2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் தென்பட்டது!

Report Print Varunan in சிறப்பு

2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் போயா தினமான இன்று அவதானிக்க முடிந்தது. இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இதுவாகும்.

இன்றிரவு 10.37 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், சனிக்கிழமை அதிகாலை 2.42 மணிக்கு முடிவடையும். இதன் உச்ச நிலையை 12.40 மணிக்கு காணலாம்.

இச்சந்திர கிரகணத்தை ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது.

சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது நிலவின் ஒளி மறைக்கப்படும் நிலையே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் இவ்வருடம் ஜூன் 05, ஜூலை 05 மற்றும் நவம்பர் 30ம் திகதிகளில் மேலும் மூன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் நடைபெற்ற சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும். அதாவது பூமியின் >நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே குறிப்பாக பூமியின் வெளிப்புற நிழல் (பெனும்ப்ரா) மட்டுமே சந்திரனில் விழுவதால் இதற்கு பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை இலங்கை ஆசியா அவுஸ்திரேலியா ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது பெனும்ப்ரல் வகை கிரகணம் என்பதால் முழு சந்திர கிரகண அனுபவத்தை பெற முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.