தர்சானந்தை பதவி நீக்குமா கூட்டமைப்பு? சாதியத்தை வளர்ப்பதில் கூட்டமைப்பு தீவிரம்

Report Print Murali Murali in சிறப்பு

என்னை தொடர்புப்படுத்தி சாதியம் பேசுவார்களாக இருந்தால், அந்த வட்டத்திற்குள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அடங்குவார் என யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.ரெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது உரை நிகழ்த்திய யாழ். மாநகரசபை புளொட் அமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந், சாதியம் பற்றி பகிரங்கமாகக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

எவ்வித தயக்கமோ, குற்ற உணர்வோ சிறிதும் இல்லாமல் அவர் சாதியம் குறித்து பேசியிருந்தார். இந்த விடயம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.ரெமீடியஸ் இவ்வாறு கூறியுள்ளார்.