ஹப்புதலையில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

Report Print Murali Murali in சிறப்பு

பதுளை - ஹப்புத்தலையில் அண்மையில் விபத்துக்கு உள்ளாகிய வை-12 ரக விமானம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் சீனத் தயாரிப்பு என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் 1990ம் ஆண்டில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டதாகவும் சுமார் 30 வருடம் பழைமை வாய்ந்த இந்த விமானம், சேவையில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து தொடர்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றையும் இந்த குழு அரசாங்கத்திற்கு சமர்பித்துள்ளது.

அதேபோல இந்த விடயத்தை அறிந்திருந்த அதிகாரிகள் விமானத்தின் நிலைமை மோசமாக இருந்ததை உரிய தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஹப்புத்தலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் அண்மையில் விபத்துக்கு உள்ளாகிய வை-12 என்ற விமானத்தில் பயணித்த நால்வர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...