பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம்! ஜனாதிபதி தீர்மானம்

Report Print Kamel Kamel in சிறப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதற்கு சமாந்திரமாக பெருந்தோட்டங்களின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேயிலை கைத்தொழில் துறையில் வினைத் திறனையும், தரத்தையும் உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது காணப்படும் வரியை குறைத்தல் மற்றும் உர மனியங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

அரசாங்கம் நிறுவனங்களுக்கு வழங்கும் நலன்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சென்றடைய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.