11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சந்தேகநபரான கடற்படை அதிகாரிக்கு பதவி உயர்வு

Report Print Ajith Ajith in சிறப்பு

கொழும்பில் 2008ம் ஆண்டில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் போகச்செய்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவுக்கு இன்று பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு ரியர் அட்மிரல் என்ற பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் கெக்கிராவையில் கல்வி கற்ற தசநாயக்க, 1987ம் ஆண்டு கடற்படையில் இணைந்துக்கொண்டார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது முக்கியஸ்தராக செயற்பட்ட அவர் பின்னர் கடற்படை பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் கடந்த அரசாங்க காலத்தில் 11 பேர் கடத்தல் தொடர்பில் தசநாயக்க குற்றம் சுமத்தப்பட்டார். இதற்காக கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

தாம் குற்றம் இழைக்கவில்லை என்று அவர் தொடர்ந்தும் கூறிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.